ஹாட் ட்ரிக் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி! ஆல் ரவுண்டராக தெறிக்க விட்ட அஸ்வின்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணியை வென்றுள்ளது.


அஸ்வின்  தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சுப்ரமணிய சிவா தலைமையிலான தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணியும் இன்று மோதின. 

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜெகதீசன் 53 ரன்களும், அஸ்வின் 52 ரங்களையும் விளாசினர். தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணியின் தமிழ் குமரன், கணேஷ் மூர்த்தி, செந்தில்நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றினர். இதனால் தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது.

எனவே திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாட்ரியோட்ஸ் அணியை வென்றது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் 52 ரன்களும் , பந்துவீச்சில் 2 விக்கெட்களும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.