அஸ்வின் அணியை தெறிக்கவிட்டு பந்து வீச்சில் மாஸ் காட்டிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது . இந்த தொடரின் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் கௌசிக் காந்தி தலைமையிலான சேபாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதியது .


டாஸ் வென்ற சூப்பர் சூப்பர்கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல்  ட்ராகன்ஸ்  அணி ,  சேபாக் சூப்பர் கில்லிஸ்  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது . திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே அதிகபட்சமாக 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார் .இதை தவிர வேறு எந்த வீரரும்  நிலைத்து நின்று ஆடாததால்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல்  ட்ராகன்ஸ்  அணி 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது .

சிறப்பாக பந்து வீசிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அலெக்சாண்டர் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் .சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார் . 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  அணி சேசிங் செய்து வருகிறது.