திடீர் உடல் நலக்குறைவு! தீவிர சிகிச்சை பிரிவில் திண்டுக்கல் லியோனி!

திண்டுக்கல் ஐ லியோனி பட்டிமன்ற பேச்சாளர் எல்லோரும் நன்கு அறியக்கூடிய நபர்.பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


பல்வேறு பட்டிமன்றத்தில் நடுவராக அமரும் லியோனி , திமுக சார்ந்த கொள்கைகள் பாற் ஈர்க்க்பட்டு இயங்க கூடியவர். இவரது பட்டிமன்றத்திற்கு தற்போதும் கிராக்கி உள்ளது. ஆனால் திமுக சார்ந்த பட்டிமன்றங்களில் மட்டுமே லியோனி கலந்து கொண்டு வருகிறார்.

அதே போல் தேர்தல் பிரச்சாரத்திலும் திமுகவிற்காக லியோனி கடுமையாக உழைத்து வந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் லியோனிக்கு திடீரென உடல் நலனில் பிரச்சனை ஏற்பட்டது.

உடனடியாக அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக புதுக்கோட்டை மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று தற்போது வரை தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில ஆண்டுகளாகவே திண்டுக்கல் லியோனி உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.