சசிகலாவை ஏமாற்றும் தினகரன்!! அதிர்ச்சியில் விவேக்! அலறும் அ.ம.மு.க. நிர்வாகிகள் !!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து சசிகலாவை சிறையில் சென்று பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார் தினகரன். சிறையில் சசிகலாவிடம் தினகரன் பேசியதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.


கடந்த ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் தினகரன் வேட்பாளராக நின்றபோது சசிகலா மிகவும் தயங்கினார். தோல்வி அடைந்துவிட்டால் மிகவும் அவமானமாக இருக்கும் என்று நினைத்தார். நிச்சயமாக நான் ஜெயித்துவிடுவேன் என்று சொல்லி அப்படியே ஜெயித்துக் காட்டினார். அதனால் தினகரன் என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார் சசிகலா.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேண்டாம் என்று சசி நினைத்தாலும், நமக்கென ஒரு தனி இயக்கம் இருக்கட்டும், தேவைப்படும் நேரத்தில் அ.தி.மு.க.வை கைப்பற்றிக்கொள்ளலாம் என்று சொல்லித்தான் இத்தனை நாட்களும் கட்சியை நடத்திவந்தார். 

இப்போது பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் ஆளும் கட்சி கூட்டணி வைத்ததில் சசிகலாவுக்கு ரொம்பவே வருத்தம். அதனால் தினகரன் எப்படியாவது மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தினகரனும் அப்படித்தான் ஆசைப்பட்டார். ஆனால், யாரும் வரவே இல்லை. 

இப்போது ஒருவழியாக தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு சசியை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதற்கு பெங்களூரு சென்றார் தினகரன். அவருடன் விவேக் மற்றும் சில முக்கிய அ.ம.மு.க புள்ளிகள் சென்றனர்.

சசிகலாவுடன் தினகரன் பேசியதைக் கண்டு அத்தனை பேரும் அலறிவிட்டார்களாம். அப்படி என்ன பேசினார் தெரியுமா?

‘‘விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், வேல்முருகன் கூட்டணிக்கு வந்தாங்க. நான் வேண்டாமுன்னு விரட்டிட்டேன். நான் தமிழ்நாடு முழுசும் போயிட்டு வந்துட்டேன். எல்லா இடத்திலும் நாம நிச்சயம் ஜெயிக்கலாம். தனியா நின்னு கண்டிப்பா 35 தொகுதி ஜெயிக்கலாம். அதனால கூட்டணி பத்தி கவலைப்பட வேண்டாம்.

நம்ம நிர்வாகிகள் எல்லோரும் தனியா நிற்கத்தான் ஆசைப்படுறாங்க என்று சொல்லி, பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்திருக்கிறார். உடனே அவர்களும் வேறு வழியில்லாமல் தினகரன் சொன்னதை வழிமொழிந்திருக்கிறார்கள். நான் அடுத்து வெற்றி செய்தியோட உங்களை சந்திக்கிறேன். விவேக்கிட்ட சொல்லி செலவுக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னாராம்.

இரண்டு மெகா கூட்டணிகள் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இப்படி வாக்கு கொடுத்திருக்கிறாரே என்று கேட்டால், ‘அதெல்லாம் தினகரனுக்கு சாதாரணம்’ என்கிறார்கள். தேர்தலில் தோற்றுவிட்டால், எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்று சொல்லி தப்பித்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.

பலே ஆளுப்பா தினகரன்.