அன்று ரம்யா நம்பீசன், கீது மோகன் தாஸ்! இன்று பிரபல நடிகையின் தாய்! தமிழ் நடிகை கற்பழிப்பு வழக்கில் திருப்பம்!

பிரபல திரையுலக முன்னணி நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் வழக்கில் தற்போது சாட்சிகள் வாக்குமூலம் அளித்துவருகின்றனர்.


தமிழ் ,கன்னடம், மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த பிரபல முன்னணி நடிகையை கடந்த 2017-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பல்சர் சுனில் என்பவரும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது இதில் பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவருக்கும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகர் திலீப்க்கும் மஞ்சுவாரியர் இருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் திலீப் இரண்டாவதாக காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடத்தல் வழக்கில் காவல்துறையினர் அவரை கைது செய்து 85 நாட்கள் சிறையில் அடைத்த நிலையில் அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி நடிகர் திலீப் அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலர் வாக்குமூலம் அளித்த நிலையில் தற்போது மஞ்சுவாரியரும் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். மற்றும் காவ்யா மாதவனின் தாயார் ஷியாமளா மற்றும் நடிகர் இடைவேள் பாபு ஆகியோரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.