புரட்சித்தலைவிக்கு மெழுகுச்சிலை... அறிவுசார் பூங்கா... டிஜிட்டல் அருங்காட்சியகம் _ நன்றி மறவாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சராக்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டவர் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரே இன்று தமிழக முதல்வராக இருக்கிறார்.


தன்னை அமைச்சராக்கி அழகு பார்த்த ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடனாக மெழுகுச்சிலை, அறிவுசார் பூங்கா அமைத்துஅழகு பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும், மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டு வந்தன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவுக்கு 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.