யப்பா! என்னா பளபளப்பு என்று உங்கள் முகத்தைப் பார்த்து பிறர் புகழ வேண்டுமா? இதோ செம டிப்ஸ்!

தன்னுடைய அழகைப் பார்த்து பிறர் புகழ வேண்டும் என்ற ஆசை இந்த உலகில் உள்ள அத்தனை பெண்களுக்கும் உண்டு. அந்த ஆசை நிஜமாக வேண்டும் என்றால், அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியது அவசியம்.


உடனே பார்லருக்குப் போக நேரமில்லை, கொடுப்பதற்கு பணம் இல்லை என்றெல்லாம் தவிக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளீச்சென மாற்ற முடியும்.

  • .எண்ணெய்த்தன்மையுள்ள சோப்பு பயன்படுத்தி முகம் கழுகவேண்டாம்.
  • நல்ல டிஷ்யூபேப்பர் எப்போதும் வைத்துக் கொள்ளவும். முகத்திலுள்ள எண்ணெய்த்தன்மை போக்குவதற்கு இது உதவும்.மூக்கைச்சுற்றியும், உதடுகளின் ஓரங்களையும்,கண்களின் கீழேயும் டிஷ்யூ பயன்படுத்தி துடைக்கவும்.
  • மேக்கப் அதிகம் உபயோகிக்கவேண்டாம். மாயிஸ்ரைசர் மட்டும் தேவைக்கு பயன்படுத்தவும்.
  • எலுமிச்சை ஜூஸ் ஃப்ரீசரில் வைத்து ஐஸ் க்யூப் ஆக்கவும். இதனை வைத்து முகத்தைத் தடவுவது நல்லது.
  • உணவில் எண்ணெய் பொறித்த உணவுக்கு டாடா சொல்லிவிட்டு காய்கறிகள், பழங்கள், இளநீர் அதிகம் உட்கொள்ளவும்.
  • சாக்லேட்,வெண்ணெய்,ஐஸ்க்ரீம் இவைகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம், அதிக நீர், டென்ஷன் இல்லாத வாழ்க்கை இவற்றை கடைப்பிடித்தால் மனமும் முகமும் பொன் போல மின்னும்.