கல்வியை புதுமையாக சொல்லித்தரும்பள்ளிக்கூடம் இது..! அனைவரும் அறிந்துகொள்வோம்..

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் புது விதமாக படிக்க விரும்புகின்றனர். பாடப் புத்தகத்தை மட்டுமே வைத்து பாடம் நடத்துவதை விட பாடத்தை ஏதாவது ஒன்றுடன் ஒப்பிட்டு பாடம் நடத்தினால் அது மாணவர்களின் மனதில் நன்றாக பதியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபித்த ஒன்றாகும்.


புவிதம் மீனாட்சி என்பவர் புனேவில் கட்டடக்கலை படித்தவர், நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பொறுக்க முடியாமல் புனேவில் இருந்து புறப்பட்டுவந்து, சமூக மாற்றத்தை கல்வியின் மூலமாகதான் கொண்டு வர முடியும் என்று தருமபுரியில் உள்ள மலையடிவாரத்தில் இலவசமாக கிராமப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மீனாட்சி நடத்திவரும் பள்ளியில் அரசு பாட திட்டத்தின் கீழ் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதிலும் ஒரு புதுமையை பயன்படுத்தி பாடம் நடத்துகின்றனர் என்பது தான் சிறப்பு.  இந்தப் பள்ளியில் அரசு பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தப்பட்டாலும் பாடத்தின் உள்ளடகத்தை பஞ்ச பூதங்கள் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து பாடம் நடத்துகிறார்கள். மீனாட்சி நடத்திவரும் பள்ளியை பற்றி அவரிடம் கேள்வி கேட்டபொழுது, "பணம் மட்டுமே பிரதானம் இல்லை வாழ்க்கையில் அனைவரையும் ஒரே மாதிரியாகவும் சமமாகும் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த பள்ளியை நான் நடத்தி வருகிறேன். இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் இதையேதான் கற்பித்து வருகிறேன்" என்று கூறினார்.

மேலும் பேசுகையில் இந்த பூமியானது ஒருவருக்கு மட்டும் சொந்தம் கிடையாது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இதில் சம உரிமை உண்டு என்பதை நாங்கள் மிகவும் ஆழமாகவும் குழந்தைகளுக்கு கற்றுத் தந்து வருகிறோம் . அதேபோல் அவர்களை நம் சமுதாயத்தில் வாழ வைக்கும் முயற்சி செய்து வருகிறோம். விரைவில் எங்கள் முயற்சி நல்ல பலனளிக்கும் என நம்புகிறோம் என்று கூறி இந்த உரையை முடிவு செய்தார் மீனாட்சி.

இப்படிப்பட்ட ஆசிரியர்கள் விதைக்கும் விதை தான் நாளை பெறும் மிகப்பெரிய மரமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமில்லை ..