உங்க ராசிக் கட்டத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறார்? எங்கு இருந்தால் என்ன பலன்?

எல்லா உயிர்களையும் ஒன்றாக எண்ணி தர்ம நீதிகளுக்கு கட்டுப்பட்டு உயிர்களை தேவ மற்றும் நரக லோகத்திற்கு அழைத்து செல்லும் எமதர்மராஜாவின் சகோதரன் என்பதுடன், உலகிற்கு ஒளி அளித்து இருளை நீக்கி வரும் உலகில் பிறந்த அனைத்து உயிர்களின் ஆத்ம காரகன் என அழைக்கப்படும் சூரிய பகவானின் புதல்வன் நம் 'சனிபகவான்" ஆவார்.


நீலன், காரி, நோய்முகன், முதுமுகன், மந்தன், முடவன், அந்தன், சாவகன் மற்றும் கீழ் மகன் போன்ற பெயர்களுக்கு உரியவர் சனிபகவான். பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி. மகரம் மற்றும் கும்பம் இவரின் வீடுகள் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

நவகிரகங்களில் நம் கர்மவினைக்கு ஏற்ப தன் தசா காலங்களில் அதற்கான பலன்களை அளிக்கக்கூடிய நீதிமான் என எல்லோராலும் அழைக்கப்படுபவர் சனிபகவான் ஆவார். அவர் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது. கெடுக்க நினைத்தாலும் எவராலும் தடுக்க இயலாது.

சனிபகவான் இருக்கும் இடத்தை மட்டும் கெடுக்காமல், அவர் பார்வைப்படும் இடங்களையும் கெடுப்பார். இவர் துன்பத்தை மட்டும் கொடுக்காமல், இன்பத்தையும் ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப கொடுப்பார். எதிலும் அளவற்ற நிலையை கொண்டவர் சனிபகவான். இன்பமானாலும், துன்பமானாலும் அளவு என்பது இல்லை.

எந்த அளவிற்கு அவரால் துன்பம் ஏற்படுகிறதோ அதே அளவிற்கு இன்பத்தையும் தருவார். உலகில் உள்ள உயிர்கள் இன்பம், துன்பம் எதுவாயினும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். இத்தொழிலை சனிபகவான் நல்ல முறையில் செய்கிறார்.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் காலம் 2 1ஃ2 ஆண்டுகள் ஆகும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள் நடக்கும். சனி இருக்கும் இடத்தை பொறுத்தே சுப பலன்களோ அல்லது அசுப பலன்களோ உண்டாகும். சனிபகவான் ஜோதிடத்தில் ராசி கட்டத்தில் நிற்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் தன் பலனை செயல்படுத்துகிறார்.

ராசிக்கு 1ல் சனி இருந்தால் ஜென்ம சனி

ராசிக்கு 2ல் சனி இருந்தால் பாத சனி

ராசிக்கு 3ல் சனி இருந்தால் சகாய சனி

ராசிக்கு 4ல் சனி இருந்தால் அர்த்தாஷ்டம சனி

ராசிக்கு 5ல் சனி இருந்தால் பஞ்சம சனி

ராசிக்கு 6ல் சனி இருந்தால் ரோக சனி

ராசிக்கு 7ல் சனி இருந்தால் கண்டக சனி

ராசிக்கு 8ல் சனி இருந்தால் அஷ்டம சனி

ராசிக்கு 9ல் சனி இருந்தால் பாக்கிய சனி

ராசிக்கு 10ல் சனி இருந்தால் கர்ம சனி

ராசிக்கு 11ல் சனி இருந்தால் லாப சனி

ராசிக்கு 12ல் சனி இருந்தால் விரய சனி