உங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆயிடுச்சா..? கொரோனா தாக்குதல் ஆபத்து அதிகம்.

சீனாவில் மட்டும் இருப்பதாக கணக்கு காட்டப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் மூலம் மரணம் நடந்திருப்பது உலக சுகாதார அமைப்பை அதிர வைத்துள்ளது.


இதுவரை இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகமாக இல்லை என்றாலும், இனியும் அப்படி அசட்டையாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான துருக்கி, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

இன்னும் முக்கியமாக அகில உலக கிறிஸ்தவ மதத்தின் தலைவராக கருதப்படும் போப் ஆண்டவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஏன், இப்படி தகவல் வெளியாகிறது?

இதுவரை நடந்த மரணங்களை கணக்கிட்டதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு மூலம் அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இளைஞர்கள், சிறுவர்களால் அந்தத் தாக்குதலில் இருந்து மீள முடியும்போது, முதியவர்களால் தப்பிக்கவே முடியவில்லை என்கிறார்கள்.

அதனால், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சோப் மூலம் கையைக் கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.