அடப்பாவிகளா… கோர்ட்டுக்கே போயிடுச்சா தி.மு.க…? பொங்கல் பரிசு பணம் கிடைக்குமா..?

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தெரிவித்துள்ளார். இதற்காக டோக்கன் கொடுக்கும் பணி நடந்துவருகிறது.


இந்த நிலையில், பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் விநியோகம் செய்வதாகச் எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் பணியாளர்கள் மூலமாக வழங்காமல், அதிமுகவினர் மூலம் வழங்குவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரூ. 2,500 க்கான டோக்கன்கள் அதிமுகவினர் மூலமாக வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால், பரிசுத் தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது என்று கூறியிருக்கிறார்கள்.

அதுதொடர்பான ஆவணங்களை நீதிபதிகள் கேட்ட நிலையில், புகைப்படங்கள், நோட்டீஸ்கள் சமர்பிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள், பெயர்கள் இல்லாமலும், அதிமுகவின் சின்னம் மற்றும் ஸ்டிக்கர் இன்றி பொங்கல் பரிசு டோக்கனை விநியோகிக்க வேண்டும். டோக்கனை ரேசன் கடை ஊழியர்களே தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நிலைதான் பரிதாபம்.