சி..ஏ.ஏ.வை ஆதரித்துத்தான் மருத்துவக்கல்லூரி வாங்கியதா அ.தி.மு.க.? திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம்

ஏதாவது ஒன்றைக் கொடுத்தால்தான் மற்றொன்று கிடைக்கும் என்பது உலக தத்துவம்.


அதற்கு எடுத்துக்காட்டு அ.தி.மு.க. என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைச்சதே, அது எப்படி, நாம சி.ஏ.ஏ.வை ஆதரிச்சதாலதான் அனுமதி கொடுத்தாங்க. இல்லைன்னா அது கிடைக்குமா என்று ஓர் அற்புதமான தகவலை பொது மேடையில் கூறியிருக்கிறார் சீனிவாசன்.

அடுத்து நாலைந்து தொழிற்சாலை அல்லது மத்திய அரசின் பள்ளிக்கூடம் தருவதாக இருந்தால், என்னவெல்லாம் செய்வார்களோ என்பதுதான் பயமாக இருக்கிறது. ஒருவேளை, எல்லா சிறுபான்மையினரையும் நாட்டைவிட்டு வெளியே அனுப்புவாரோ..?

சீனிவாசன் வாயைத் திறந்தாலே சிக்கல்தான்.