பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்!!!! சுரேஷ் காவல்துறையினரிடம் அளித்த விளக்கம்!!!
நெருங்கி பேசினார் அந்த நடிகை..! அதான் நெக்லஸ் கொடுத்தார் மாமா..! எய்ட்ஸ் முருகன் மருமகனின் கிளுகிளு வாக்குமூலம்!
லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட சுரேஷ் நடிகைகளுடன் நடத்திய உல்லாசத்தை காவல்துறையினரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். காந்தி ஜெயந்தி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற தொல்லைகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ், முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான்.
பின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். காவல்துறையினர் தன்னை பல மாநிலங்களில் தேடி வருவதை உணர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
பெங்களூரு காவல்துறையினர் 3 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு ப்ரொடியூசராக களமிறங்க திட்டமிட்டனர். உடனடியாக பல்வேறு நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை செய்து வந்துள்ளனர். ஆனால் நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அவர் தன் சகோதரியின் மகனான சுரேஷை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அப்போது ஒரு நடிகையிடம் பேசியபோது, முதலில் கால்ஷீட் கொடுக்க மறுத்துவிட்டார். முதலில் அவர் கால்ஷீட் கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது நகை கடை வியாபாரி என்று சுரேஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவுடன் அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்துள்ளார் மேலும் திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை அந்த நடிகையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகையும் அந்த நகையை வாங்கிக் கொண்டுள்ளார்.
ஆனால் இதைப்பற்றி ஒவ்வொரு நாளும், நடிகைகளின் பெயரை மட்டும் மாற்றி கூறி வருவதால் காவல்துறையினர் குழப்பம் அடைகின்றனர். மேலும் விசாரணையில் இன்னும் எவ்வளவு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என்று காவல்துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர்.