இசை வெளியீட்டு விழாவிற்கு இளைய தளபதி விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ.3 கோடி சொகுசு காரில் பிகில் ஆடியோ லாஞ்சிற்கு வந்த விஜய்! கண்டுபிடித்த ரசிகர்கள்!
இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த திரைப்படம் "பிகில்". இந்த திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. படமானது தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த விழாவிற்கு இளைய தளபதி விஜய் மிகவும் பிரம்மாண்டமான காரான ரோல்ஸ் ராய்ஸில் வந்திறங்கினார்.
இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இது இளைய தளபதி விஜயின் சொந்த வாகனமா என்று வியக்கின்றனர். இன்னும் சிலர் தயாரிப்பாளரின் காரில் விஜய் வந்திருக்கலாம் என்று வியூகிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆனந்த்ராஜ், ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.