8 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்த நடிகர்! காரணம் பிக்பாஷ் தர்சன் காதலியா?

அம்புலி பட கதாநாயகனின் தற்கொலைக்கு அந்த படத்தின் கதாநாயகியே காரணமாக இருக்கக்கூடும் என்ற செய்தி வைரலாகி வருகிறது.


சமீப காலத்தில் சனம் ஷெட்டி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறார். பிக்பாஸ் தொடரின் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக தர்ஷன் திகழ்ந்து வருகிறார். இவர் அம்புலி படம் கதாநாயகியான சனம் ஷெட்டியின் காதலர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் வனிதா சென்ற வாரத்தில் தர்ஷனுக்கும், நடிகை ஷெரீனுக்கும் இடையே காதல் இருப்பதாக பேசினார். இது சம்பந்தப்பட்ட இருவரையுமே காயப்படுத்தியது. இதற்கு ஊடகவியலாளர்கள் நடிகை சனம் ஷெட்டியிடம் விளக்கம் கேட்டனர். அப்போது கூறுகையில் சனம், "உண்மையிலேயே தர்ஷன் அத்தகைய வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருந்தால் அதற்கு எப்போதும் நான் தடையாக இருக்க மாட்டேன். நான் எப்பொழுதும் தர்ஷன் நலனுக்காகவே யோசிப்பேன்" என்று கூறினார். 

இந்நிலையில் அம்புலி பட கதாநாயகனான அஜய்யின் தற்கொலைக்கும்,சனம்ஷெட்டிக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2011-ஆம் ஆண்டில் வெளியான அம்புலி திரைப்படத்தின் போது அஜய் சனம் ஷெட்டி மீது காதல் கொண்டுள்ளார். முதலில் அதற்கு ஒத்துழைத்த சனம் ஷெட்டி, சில மாதங்களிலேயே வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஜய் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் சிலர் கூறுகையில், 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை இப்பொழுது மீண்டும் வெளியில் எடுப்பது நல்லதல்ல. மேலும் எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

செய்தியை வீடியோவாக பார்க்க