உலக வங்கியிடம் ரூ.57 லட்சம் கோடி கடன் உள்ளது! இந்த லட்சனத்தில் ரஷ்யாவுக்கு 7000 கோடி கடன் கொடுக்கும் இந்தியா! சீமான் சாட்டையடி கேள்வி!

ரஷ்யாவுக்கு கடனளிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விட்டதா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்திய பிரதமர் மோடி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை ரஷ்ய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டின் பல விழாக்களில் கலந்து கொண்ட அவர் பிரதமர் உரை வழங்கும் போது, "இந்தியாவின் "கிழக்கு நோக்கி" செயல்திட்டத்தின் கீழ் ரஷ்ய நாட்டிற்கு 7,200 கோடி ரூபாய் கடன் அளிக்க உள்ளோம்" என்று கூறினார்.

இந்த உரைக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் ஆட்சேபனையை தெரிவித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மிகவும் ஆவேசமடைந்து பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.

அவர் கூறுகையில், "பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய மூர்க்கத்தனமான திட்டங்களினால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை. இதனால்தான் ஆட்டோமொபைல் நிர்வாகம் கடுமையாக பாதித்துள்ளது.

நம் நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் எந்த தைரியத்தில் பிரதமர் அவர்கள் ரஷ்ய நாட்டிற்கு 7,200 கோடி ரூபாய் கடன் அளிப்பதாக பேசினார் என்று தெரியவில்லை.

பொருளாதாரம் சரியில்லாததால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசானது கடன் வாங்குவதாக அறிவித்தது. நம் நாடு உலக வங்கியிலிருந்து 57 லட்சம் கோடி ரூபாய் கடனாளியாக உள்ளோம். இவ்வளவு இக்கட்டாக உள்ள நிலையில் எந்த தைரியத்தில் ரஷ்யா நாட்டிற்கு பணம் அளிக்க வாக்குறுதியளித்தார். இது மிகவும் அபத்தமானது" என்று கொந்தளித்தார்.

இந்த சம்பவமானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.