ஜீப் கிராண்ட் ச்செரோக்கி! தோனி வீட்டுக்கு வந்த ரூ.1 கோடி கார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.


பொதுவாக தோனி பைக் மற்றும் கார்களை ஓட்டுவதிலும்  ,வித்தியாசமான வாகனங்களை வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . சமீபத்தில் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து  இரண்டு மாத காலம் விலகி இருந்து காஷ்மீரில் இந்திய ஆர்மி உடன் இணைந்து  பணிபுரிந்து வருகிறார் .

இந்நிலையில் தோனியின் மனைவி ஷாக்சி புதிய காரை போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . சிகப்பு நிறத்திலான ஜீப் கிராண்ட் ச்செரோக்கி காரின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் மகேந்திர சிங் தோனி இதற்கு முன்னரே ஃபெராரி 599 GTO, ஹம்மர் H2 மற்ற கார்களை வைத்துள்ளார் . அதேபோல suzuki Hayabusha, kawasaki ninja H2 போன்ற உயர்ந்த தர பைக்களும் இவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .