படுக்கை அறையில் தோனி..! அவரது கால்களை மனைவி தோனி என்ன செய்கிறார் பாருங்க..!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் கால்களை அவரது மனைவி சாக்ஷி கடிக்கும் விதமான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள், நடிகர்- நடிகைகள் என அனைவரும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவின் பொழுது பிரபலங்கள் தங்கள் வீடுகளில் தாங்கள் செய்யும் வேலைகளையும் குறும்புத்தனங்களையும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் மூலம் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு அவரது மனைவி முடி வெட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த நட்சத்திரமாக வலம் வரும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்களின் மனைவி சாக்ஷி தோனி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் தோனி தன்னுடைய கட்டிலில் ஐப்பேடை வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். அப்பொழுது அவரது மனைவி சாக்ஷி, தோனியின் கால்களை தன் மடிமீது வைத்து அவரது கால் விரல்களை வாயால் கடிக்கிறார். இதனை புகைப்படமாக எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி தோனி.

மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, 'Mr.ஸ்விட்டியின் கவனத்தை ஈர்க்கும் நேரம்" என்று வெளியிட்டிருக்கிறார். எப்பொழுதுமே சாக்ஷி தன்னுடைய கணவரை மிஸ்டர். ஸ்வீட்டி என்று செல்லமாக அழைப்பதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 தற்போது சாக்ஷி வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

இது மட்டுமில்லாமல் தோணியின் மனைவி சாக்ஷி, ராஞ்சியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து தொடர்ந்து பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.