இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து சகவீரர் குல்தீப் யாதவ் வெளியிட்டுள்ள அதிர்ச்சியான கருத்துக்கள் வைரலாகி பரவு வருகிறது.
களத்தில் பலமுறை தவறு செய்வார்! தட்டிக் கேட்க கூட முடியாது! தோனி மீது குல்தீப் யாதவ் பகீர் புகார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு தலைமை ஏற்று 2007ல் T 20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வென்று தந்துள்ளார்.
சியட் கிரிக்கெட் விருது நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தோனி ஆட்டத்தின் போது அதிகமாக பேச மாட்டார். பந்து வீசும் போது ஓவர்களின் நடுவே திடீரென வந்து சில யோசனைகளை சொல்வார். அவர் கருத்தில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார். அதனை மற்றவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
சில நேரங்களில் அவர் எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் அதனை அவரிடத்தில் சொல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் அதிரடியாக கூறியுள்ளார். இவர் கூறியுள்ள இந்த கருத்துக்கள் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.