தோனியின் நம்பர் செவன் ஜெர்சி யாருக்கு? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து விளையாடுவார்கள். அந்த ஜெர்சியில் வீரரின் பெயர் மற்றும் நம்பர் எதுவுமே இருக்காது.


இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இனிமேல் வெள்ளை நிற ஜெர்ஸியில் வீரர்களின் பெயர் மற்றும் நம்பர் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவுறித்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பெயர் மற்றும் நம்பர்களை ஜெர்சியில் பயன்படுத்தவுள்ளனர்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை சில வருடங்களுக்கு முன்னதாக  அறிவித்த தோனியின் 7 என்ற ஜெர்ஸி நம்பரை மற்ற வீரர்கள் பயன்படுத்தி கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிசிசிஐ,  இந்திய வீரர்கள் வழக்கமாக ஒரு நாள் போட்டிகளில் பயன்படுத்தும் எண்களையே டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும் டோனி பயன்படுத்திய ஜெர்ஸி நம்பர் 7 , வேற எந்த வீரருக்கும் கொடுக்கப்படமாட்டாது என பிசிசிஐ அதிரடியாக கூறியுள்ளது. 7 என்ற ஜெர்ஸி நம்பர் தோனிக்கு மட்டும் தான் என்று கூறியதால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.