ஆஸி க்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் தோனிக்கு ஓய்வு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் ரிஷாப் பாண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை ரிஷாப் பாண்ட் சரியாக பயன்படுத்தி கொண்டால் உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பது உறுதி.

நேற்று நடந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.