ஆஸிக்கு எதிரான 2வது ODI! ரன் மோசடியில் ஈடுபட்ட தோனி! தண்டனையில் இருந்து தப்புவாரா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தோனி ரன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.


  ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை சமன் செய்தது.  டெஸ்ட் தொடரை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. 

 

இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி வெற்றிப்பாதையை நோக்கி சென்றது. 

 

கடைசியாக மகேந்திர சிங் தோனியும் தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதில் மஹேந்திரசிங் தோனி 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ய போராடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டி தொடர் தற்போது சமனில் உள்ளது. 

 

இந்த நிலையில் இந்த போட்டியில் மஹேந்திரசிங் தோனி ஓடி எடுத்த ஒரு ரன் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 45-வது ஓவரில் அவர் ஒரு ரன் ஓடினார். அப்போது கிரீசில் கால் வைக்காமலும் பேட்டை வைக்காமலும் திரும்பிச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ஆஸ்திரேலிய ஊடகங்களும் இதற்காக தோனியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.


   மேலும் உள்நோக்கத்துடன் தோனி இப்படி செய்தாரா என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அப்படி உள்நோக்கத்துடன் தோனி செய்திருந்தால் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்க.ள இருந்தபோதிலும் பொறுமையாகவே ஓடி ரன் எடுத்து உள்ள தோனி தெரியாமல் அவ்வாறு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைக்கும் திறன் கொண்ட தோனி ஒரு ரன்னுக்காக  எப்படி மோசடியில் ஈடுபடுவார் என்றும் ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.