ஜனவரி வரை என்னிடம் அதைப் பற்றி கேட்காதீர்கள்! பகீர் தகவல் வெளியிட்ட தோனி!

கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனவரி மாதம்வரை தன்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று தோனி பதிலளித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி , உலக கோப்பை ஆட்டத்திற்கு பின்னர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காததால் அவர் மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மும்பையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர் தன்னுடைய வருங்காலத்தை பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். 

தோனி தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடர போகிறாரா? அல்லது ஓய்வு பெறப் போகிறாரா? என பலரும் யோசித்து வரும் நிலையில் தோனியின் பதில் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஜனவரி மாதம் வரை என்னிடம் இதைப்பற்றி கேட்காதீர்கள் என்று பதிலளித்துள்ளார். தோனியின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் யோசனையை உண்டாக்கியுள்ளது.

ஜனவரி மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஒருவேளை இந்த போட்டிகளில் மனதில் வைத்துதான் தோனி இவ்வாறு பதிலளித்துள்ளாரா என்று அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.