மைதானத்தில் களம் இறங்கிய மகள்கள்! தெறிக்கவிட்ட தல! குட்டி தல!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இரண்டாவதாக  களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வாட்சன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்த இரு வீரர்களும் 50 ரன்களை விளாசினர். இதனால் சென்னை அணியின் வெற்றி உறுதியானது.

சென்னை அணி 19 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.  சிறப்பாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ipl இறுதி போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னர் நம்ம தல தோணி அவரது செல்ல மகளுடன் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  தோனியின் செல்ல மகள் ஜிவா மற்றும் நம்ம சின்ன தல ரெய்னாவின்  செல்ல மகள் கிராசியாவுடன் இணைந்து  மைதானத்தில் தோனி யோடு விளையாடும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது என்றே கூறலாம்.