பிக்பாஸ் பைனல்..! யாருக்கு ஓட்டு போட வேண்டும்? ஷெரீனுக்கா? சாண்டிக்கா? தர்ஷன் வெளியிட்ட முக்கிய வீடியோ..!

பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் தர்ஷன் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தர்ஷன், நேற்றைய தினம் முதன்முதலாக வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் தன்னை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். 

தர்ஷன் வெளியிட்ட இந்த வீடியோ பதிவில், நான் யாரையும் குறிப்பிட்டு இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லமாட்டேன் . ஏனென்றால் என்னை விட நீங்கள் எல்லாரையும் மிக சிறப்பாக கணிப்புகள் என்று நம்புகிறேன். ஆகையால் ஒவ்வொருவரின் ஹார்ட்வொர்க் பொறுத்து நீங்கள் வாக்களியுங்கள் என்று கூறினார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் தர்ஷன் உடைய பெருமிதத்தை கண்டு ஆச்சரியமடைந்தனர் . மேலும் வனிதா , அபிராமி போன்றவர்கள் மேலும் இவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். தர்ஷன் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.