சவுந்தர்யாவை கரம் பிடிக்க முதலில் தனுஷை சந்தித்த விஷாகன்! ஏன் தெரியுமா?

சவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது கணவரான விசாகன் திருமணத்திற்கு முன், ரஜினியை பார்க்க பதட்டபட்டதால் சௌந்தர்யாவின் சகோதரியான ஐஸ்வயாவையும் அவரது கணவர் தனுஷ் ஆகியோரை சந்தித்து உள்ளார்.


சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந், இந்த ஆண்டு துவக்கத்தில் தொழிலதிபர் விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  இது விசாகனுக்கும் இரண்டாவது திருமணம் ஆகும். இவர்கள் திருமணத்திற்கு பின்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர்கள், "எங்களது  திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது" என்று கூறினர். 

சவுந்தர்யா முதலில் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சவுந்தர்யா – அஸ்வின் ஜோடிக்கு கடந்த 2015 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே சவுந்தர்யா தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை போயஸ் கார்டனில் தந்தை ரஜினி வீட்டில் சவுந்தர்யா வசித்து வருகிறார்.  இதற்கு இடையே சவுந்தர்யாவின் முன்னாள் கணவர்அஸ்வின் வேறு ஒரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சௌந்தர்யா பேசுகையில், "முதலில் விசாகன் என் அப்பாவை பார்க்க மிகவும் பதட்டபட்டார்.  ஆகையால் நான்  அவரை என் சகோதரி ஐஸ்வயாவையும் அவரது கணவர் தனுஷ் ஆகியோரையும் சந்திக்க வைத்தேன்.  அப்போது நடிகர் தனுஷ், விசாகனிடம் நடிகர் ரஜினி மிகவும் கூலான மனிதர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவதை பற்றி நடிகர் தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கூறியுள்ளார்.  மேலும் அவர் ரஜினி பற்றி விசாகனிடம் பேசியதை பற்றி கூறினார்.  இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் முதன்முதலாக கால் பதித்து உள்ளார். "பாகிர்" என்ற ஹாலிவுட் திரைப்படத்தில்  நடித்து உள்ளார்.

இந்த திரைப்படமானது பிரெஞ்ச், ஆங்கிலம்  மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 21 அன்று  திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு உள்ளார்.