மச்சினிச்சிக்கு 2வது கல்யாணம்! தனுஷ் செய்த மோசமான செயல்! கடுப்பில் ரஜினி!

மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யாவின் திருமணத்தில் நடிகர் தனுஷ் நடந்து கொண்ட விதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கோபம் அடையச் செய்துள்ளது.


ரஜினியின் இளைய மகளும் தனுசின் மச்சினிச்சியுமான சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் விஷாகனுடன் வரும் திங்களன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கடந்த 2017ம் ஆண்டு சவுந்தர்யா விவாகரத்து செய்தார்.

 

இந்த நிலையில் தொழில் அதிபர் விஷாகனுடன் சவுந்தர்யாவுக்கு காதல் ஏற்பட்டது. காதலுக்கு இரண்டு வீட்டாலும் பச்சைக் கொடி காட்டினர். இதனை தொடர்ந்து வரும் திங்களன்று சவுந்தர்யா – விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

 

இதற்கு முன்னதாக உறவினர்களுக்காக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மணமக்களுடன் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் சகோதரி ஐஸ்வர்யா, அனிருத் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

 

ஆனால் ரஜினி குடும்பத்தின் மூத்த மருமகனான தனுஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. இதனால் திருமண வரவேற்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

 

மச்சினிச்சியின் 2வது திருமணத்தில் தனுசுக்கு உடன்பாடு இல்லை என்று கொளுத்திப் போட்டார்கள். ஆனால் விசாரித்த போது தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனுஷ் தாமதமாக வந்தது தெரியவந்தது. கிட்டத்தட்ட வரவேற்பு முடிந்த பிறகே தனுஷ் வந்துள்ளார்.

 

இதனால் அவர் மணமக்களுடன் இருப்பது போன்று புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. அசுரன் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்த காரணத்தினால் தனுஷ் மச்சினிச்சியின் வரவேற்பில் பங்கேற்கவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் தனுஷ் எப்போதுமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அப்படி இருந்தும் கடமைக்கு அவர் மச்சினிச்சியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டதாக குடும்பத்தினர் கடுப்பில் உள்ளனர். அதிலும் மூத்த மருமகனாக இருந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தனுஷ் லேட்டாக வந்ததை ரஜினி சிறிதும் விரும்பவில்லை என்கிறார்கள்.