எப்போதும் செல்வச்செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர் யார்..? வருவதை முன்கூட்டி அறியும் ராசி யாருக்கு?

ராசி மண்டலத்தில் தனுசு ராசி 9வது ராசியாகும்.


இந்த ராசியின் அதிபதியாக நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குருபகவான் ஆட்சி செய்கிறார். மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.

இந்த ராசி குருவுக்கு சொந்த வீடாக இருப்பதால் இந்த ராசியில் குருபகவான் ஆட்சி அதிபதியாகவும், மற்ற கிரகங்கள் சமமாகவும், நட்பாகவும் விளங்குகின்றன. ஆகவே, இந்த ராசியில் மட்டுமே எந்தக் கிரகமும் நீசம் அடையாமலும், பகையும் பெறாமலும், நட்பாகவும் மற்றும் சமமாகவும் விளங்குகின்றன.

எதிர்காலத்தில் நடக்கப்போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. மேலும், யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும்.

சூரியன் தனுசு ராசியில் நிற்கும் காலமே தனு மாதம் எனக் கணக்கிடப்படும். எனவே, தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் தொடங்கும். தனுசு ராசி ஆண் ராசி என அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தத்துவங்களில் நெருப்பு ராசி எனவும் கூறப்படுகிறது. ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலம் இவர்களுக்கு வாழ்வில் பல ஏற்றங்கள் ஏற்படும்.

உறவினர்களை அனுசரித்து செல்வதுடன், தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் இவர்களிடம், செல்வம் ஏதாவது ஒருவகையில் இருந்து கொண்டே இருக்கும்.

அதிகாரம் மற்றும் அடக்குமுறை எண்ணங்கள் இந்த ராசிக்காரர்களிடம் அதிகம் நிறைந்திருக்கும். கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் உடையவர்கள். பூஜைகளின் மீது அதீத நம்பிக்கை உண்டு. பலருக்கும் முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பவர்கள். இதனால் அரசியல் தொடர்பு மற்றும் கௌரவ பதவிகள் கிடைக்கும்.