கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பகுதியில் 200 பக்தர்கள் தவித்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டிய மழை! பெருக்கெடுத்த காட்டாறு! சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலையில் சிக்கிய 200 பேர்! திக்திக் நிமிடங்கள்!
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே மிகவும் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி முதலிய பிரசித்தி பெற்ற நாட்களில் மட்டுமே மக்கள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி தெரிவித்துள்ளனர்.
நேற்று பிரதோஷமாக இருந்ததால் பக்தர்கள் கோவிலில் அலைமோதினர். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று திடீரென்று மலை வெளுத்து வாங்கியது. மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, வழுக்குப்பாறை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இறைவனை தரிசித்த மக்கள் பலர், சங்கிலிப்பாறை ஓடையை கடக்க முடியாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த தகவல்கள் தீயணைப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
உரிய உபகரணங்களுடன் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். மழை பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்த தீயணைப்பு படையினர் இரு முனையிலும் கயிறுகளை கட்டி மக்களை பாதுகாப்பாக மீட்டு எடுத்தனர். சுமார் 6 மணி நேரம் இந்த மீட்புப்பணி நடைபெற்றது.
மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும், மாவட்ட ஆய்வாளர்களுக்கும் விபத்தில் சிக்கி கொண்ட பக்தர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கனமழை காரணமாக கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.