விநாயகருக்கு மிகவும் பிடித்த பண்டம் என்ன தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு கடவுளாக திகழ்பவர் விநாயகர்.


அழகான ஆணை முகமும் எழில்கொஞ்சும் காதுகளும் மிகப்பெரிய தொப்பையும் அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை என்று கூறலாம்.

இத்தகைய சிறப்புமிக்க விநாயகருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் விநாயகருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து அதனை அவருக்கு நிவேதனம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளோம் அந்தவகையில் நாம் அறியாத ஒரு உணவுப் பொருளானது விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது . அது என்னவென்றால் கோதுமை அப்பம் . இந்த உணவானது வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது . இந்த உணவை விநாயகர் விரும்பி உண்ணுவார் என்று வட இந்திய மக்கள் நம்புகின்றனர். 

கோதுமையையும் சர்க்கரையும் கலந்த உருண்டைகளை நெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் அதுவே கோதுமை அப்பம் . வட இந்திய மக்கள் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று இந்த கோதுமை அப்பத்தை அவர்கள் இல்லத்தில் சமைத்து அதனை விநாயகருக்கு நிவேதனமாக படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.