துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் கொடியேற்றம்… கல்வி நிதி வழங்கி சிறப்பித்தார்..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 49-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைக் கழகத்தில் கொடியேற்றி சிறப்பித்தார்.


சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைக்க, சென்னையில் தொண்டர்கள் முன்னிலையில் பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியேற்றி 49வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்.

பன்னீர் செல்வம் வந்த நேரத்தில் அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து கும்பிட்டுவிட்டு கொடியேற்றி வைத்தார்.

இதைஅடுத்து, ஜெயலலிதாவால் கல்வி நிதியுதவி பெற்றவர்கள் உட்பட, MBBS இறுதி ஆண்டு படித்து வரும் 22 மாணவ, மாணவியர்; MBBS இரண்டாம் ஆண்டு படித்து வரும் 1 மாணவி; பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் 5 மாணவ, மாணவியர் என, 28 பேருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கணக்கில் இருந்து மொத்தம் 26,39,778/- ரூபாய்க்கான வரைவோலைகளை, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரிடம் நேரில் வழங்கி சிறப்பித்தார்.