துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சென்னை, அடையாரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அடையாரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று துணை முதலமைச்சர். ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். அவருடன் பல்வேறு அமைச்சர் பெருமக்களும் சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.