சொத்தைப் பல் பிரச்னையா சுண்டைக்காய் தீர்த்திடுமே !!

கசப்புத்தன்மை வாய்ந்த சுண்டைக்காய் சமையலுக்கும் பயன்படக்கூடியது. குழம்பு, வற்றல், கூட்டு செய்து சாப்பிடுவதால் பல்வேறு மருத்துவ நலன் உண்டாகிறது.


·         சுண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்கும் என்பதால், உடலுக்குள் நுழையும் நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றுகிறது.

·         சுண்டைக்காயில் தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் வாய்ப்புண், சொத்தைப் பல் பிரச்னைகளுக்கு எதிர்வினை புரிகிறது.

·         ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சக்தியும் சுண்டைக்காய்க்கு உண்டு என்பதால் வாரம் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.