பிரசவ வலி..! துடித்த கர்ப்பிணி! கைகொடுக்காத ஆம்புலன்ஸ்! ஆனால் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

டெல்லியில் பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காதபட்சத்தில் டெல்லி போலீசார் தங்களது வாகனத்தின் மூலம் பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அவரது பிரசவத்திற்கு உதவி செய்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ‌


கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகெங்கிலும் அதனுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

இந்த வைரஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக நம்முடைய மத்திய அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நாடெங்கிலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வது என்பது மிகப்பெரிய சவாலாக ஒன்றாக மாறியுள்ளது.

அந்தவகையில் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். போன் செய்து நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அந்தப் பெண் வலியால் துடித்து இருக்கிறார்.

நேரத்தில் அருகில் இருந்த ரஞ்சனி என்ற பெண் உடனடியாக டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கிறார். தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப் பட்டது பின்னர் அந்த பெண்ணிற்கு அழகிய குழந்தையும் பிறந்தது. அடுத்து அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் தகவலை போலீசார் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு கூறியுள்ளனர்.

இதனை பற்றி அறிந்த அவரது கணவர் சங்கீத் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் போலீசாரும் தாங்களாக முன்வந்து இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது மன நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கூறியுள்ளனர்.