வேட்புமனுவை தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்ற கெஜ்ரிவால்! தாமதமாகி வீடு திரும்பியதால் பரபரப்பு!

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யாமலேயே நேற்றையதினம் வீடு திரும்பியுள்ளார்.


வரும் பிப்ரவரி மாதம் 8- ம் தேதி 70 தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக டெல்லியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய துவங்கியுள்ளனர் . நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்வர் வேட்புமனுவை ஊர்வலமாக சென்று.

இதனையடுத்து டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தன்னுடைய வேட்புமனுவை தன் தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக சென்று தாக்கல் செய்ய இருந்தார் . ஆனால் அவருடைய ஊர்வலம் ஆனது வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை சென்று அடைய மிகவும் தாமதப்படுத்தியது. இதனால் அவர் சுமார் மாலை 3 மணிக்கு மேலே அலுவலகத்தை சென்றடைந்தார். 

 இதனையடுத்து அலுவலகம் மூடப்பட்டுவிட்டது ஆகையால் கேஜ்ரிவால் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்யாமலேயே வீடு திரும்பிவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால் அலுவலகத்தை சென்றடைய வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஊர்வலம் சற்று தாமதமானதால் என்னால் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல இயலவில்லை. இருப்பினும் நாளைய தினம் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.