அவசியம் புடலங்காய் சாப்பிடணும்! ஞாபகசக்தி கொடுக்கும் தன்மை புடலங்காய்க்கு அதிகம் உண்டு.

வீட்டுத் தோட்டத்தில் முளைக்கக்கூடிய புடலங்காய் சுவை நிறைந்தது மட்டுமல்ல, நிறைய ஆரோக்கியம் தரக்கூடியதும் ஆகும். புடலங்காய் இளசாக இருக்கும்போதே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய காய் கசப்புத் தன்மையுடன் இருக்கும்.


புடலங்காயை விதைகளை நீக்கிவிட்டு, தோலை லேசாக சீவி பயன்படுத்த வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் சத்துக்கள் புடலங்காயில் நிரம்பியுள்ளன.

• நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்குவதுடன் அஜீரணக் கோளாறுகளையும் நீக்குகிறது.

• நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுப்பதுடன் நல்ல ஞாபகசக்தி கொடுக்கும் தன்மையும் புடலங்காய்க்கு உண்டு.

• புடலங்காயில் நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் தேவையற்ற உப்புநீர், வியர்வை, சிறுநீர் வெளியேற உதவுகிறது.

• மெலிந்த தேகம் உடையவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் விரைவில் புஷ்டியான உடல் அடையமுடியும். 

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிப்படுத்தும் தன்மை புடலங்காய்க்கு உண்டு. மேலும் கண் பார்வையை அதிகரிக்கும் சத்துக்களும் புடலங்காயில் இருக்கின்றன.