என்னுடையை காதலனைத் தான் நீ கல்யாணம் செஞ்சிக்க போற..! இளம் நடிகையை சீண்டிய சீனியர் நடிகை!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது முன்னாள் காதலனை நடிகை ஆலியா பட் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.


நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பிரிந்தனர். 

இதனால் நடிகை தீபிகா படுகோனே மன அழுத்தத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்று பின்னர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை தீபிகா படுகோனே நான் ரன்பீர் கபூரை காதலித்தேன் ஆனால் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டேன்

அதேபோல நடிகர் ரன்பீர் கபூரும் என்னை காதலித்தார். ஆனால் ஆலியா பட்டை திருமணம் செய்து கொள்வார் என அனைவரின் முன்னிலையிலும் கூறினார்.இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை தீபிகா படுகோனேவின் பேச்சைக் கேட்ட நடிகை ஆலியா பட் கோபமடைந்து இந்த விஷயத்தை ஏன் இங்கே பேசுகிறார்கள் என்று அவரிடம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.