தனி விமானத்தில் முன்னாள் காதலனுடன் கெட்ட ஆட்டம்! திருமணமான நடிகையின் வீடியோ வைரல்!

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு "ஏ ஜவானி ஹாய் தீவானி" என்ற திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகி மிக பெரிய பிளாக் பர்ஸ்ட்டர் வெற்றியை பெற்றது.


இந்த வெற்றி திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தனர்.  இதில் தீபிகா "நைனா " என்ற கதாபாத்திரத்திலும் மற்றும்  ரன்பீர் "பன்னி"  என்ற கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்ளின் உள்ளங்களை கொள்ளை கொணடனர்.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்க்கை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முன்பு  தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

கடந்த 2013 -ஆம் ஆண்டு வெளியான  "ஏ ஜவானி ஹாய் தீவானி" திரைப்படத்தில்,  ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்து பின்பு காதலர்களாக மாறும் விதமாக திரைப்படத்தின் கதை பாதை சென்றிருக்கும். 

இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களில் ஹோலி விழாவின் போது இடம்பெறும் "பாலம் பிச்சக்காரி" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.  சிறந்த பின்னணி பாடகைக்குக்கான "பிலிம் பேர்" விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இந்த திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் ஆனாலும், இன்னமும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்கா  இடத்தை பெற்று உள்ளது என்றே கூற வேண்டும்.  சமீபத்தில் நடந்த "ஸ்டார் ஸ்க்ரீன்" விருது விழாவில் பங்கேற்ற  தீபிகா படுகோனே மற்றும் அவருடைய முன்னாள் காதலன் ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் விழாவிற்கு பின்பு தங்களுடைய வேனிட்டி வேனில் "பாலம் பிச்சக்காரி" என்ற பாடலுக்கு நடனம் ஆடினர்.

இந்த வீடியோ பதிவை தீபிகா படுகோனே சமூக வலைதளத்தில் பதிவு இட்டார். மீண்டும் பன்னியையும் நைனாவையும் திரும்ப பார்த்தது போல் இருந்தது இந்த வீடியோ பதிவு. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் "என்னதான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும், இப்படி முன்னாள் காதலருடன் இந்த ஆட்டம் போடுகிராரே நடிகை  தீபிகா ?" என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகை தீபிகா படுகோனே "மெகா குலஜார் சப்பக்" என்ற திரைப்படத்திலும் ரன்பீர் கபூர் "பர்மாஸ்ட்ரா" என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.