அமெரிக்காவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை ! அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பு ..

இந்தியாவில் தீபாவளி என்றாலே எல்லா மதத்தினரும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக காணப்படுகிறது.


இந்தியர்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி பண்டிகை தற்போது வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகையை வரும் அக்டோபர் 24ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதன் முதலில் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாட்டத்தை அந்த சமயத்தில் அதிபராக இருந்த ஒபாமா அவர்கள் துவக்கி வைத்தார். 

அவரைத் தொடர்ந்து தற்போது அதிபராக பதவி வகித்து வரும் டிரம்ப் அவர்களும் இந்த தீபாவளி பண்டிகையை தன் நாட்டு மக்களுடன் கோலாகலமாக கொண்டாடப் போகிறார். இதனை அடுத்து வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கையில், அக்டோபர் 24ஆம் தேதி அதிபர் டிரம்ப் முன்னிலையில் தீபாவளி பண்டிகையானது அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடக்கவுள்ள இந்த விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்று கொண்டாடப்படும் மூன்றாவது தீபாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.