மதங்கள் கொண்டாடும் தீபாவளியின் மகத்துவம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு மதத்திலும் பல விதங்களாக பல காரணத்திற்காக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அந்த பல விதங்களை பற்றி காணலாம்.


வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் , ராமபிரான் ராவணனைக் கொன்று 14 ஆண்டுகள் வன வாசத்தை முடித்துக்கொண்டு அயோத்தி திரும்பிய நாளை மக்கள் தீபங்கள் ஏற்றி தீபாவளியாக கொண்டாடினர் என்று கூறப்படுகிறது. 

கந்தபுராணத்தின் படி , அம்பாளின் 21 நாட்கள் கொண்ட கேதாரகௌரி விரதம் முடிவுற்ற நாளில் சிவபெருமான் சக்தியை தன்னுள் பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. 

கிருஷ்ணபிரான் நரகாசுரனை அவதாரம் தரித்து கொன்று கொலை செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. 

சமணர்கள் , மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளையே தங்களுடைய தீபாவளி தினமாக கொண்டாடி வருகின்றனர். 

சீக்கியர்கள் கடந்த 1577 ஆம் ஆண்டு தங்களுடைய போர் கோவில் கட்ட துவங்கிய தினத்தையே தீபாவளியாக அனுசரித்து வருகின்றனர்.

இதேபோல் மேற்கு நாடுகளிலும் பல இடங்களில் பல காரணங்களை முன்வைத்து தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெஸ்டிவல் ஆஃ லைட்ஸ் ( Festival of lights) என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை ஆனது பல்லினப் பண்பாட்டின் விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.