பப்பிம்மா அ.தி.மு.க.வில் சேர முடிவு... அதிர்ச்சியில் எடப்பாடி?

விரைவில் அ.தி.மு.க.வில் இணையப் போகிறேன், சேரப்போகிறேன் என்று ஜெ.தீபா பூச்சாண்டி காட்டி வருவதற்குப் பின்னே பெரிய பதவி அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.


தமிழக அரசியல் களத்தை காமெடி மேடையாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் நம்ம பப்பிம்மா என்று செல்லமாக கட்சித் தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெ.தீபா. ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில் நுழைந்து கலக்குவதற்கு ஆசைப்பட்டார். அவரது கெட்ட நேரமோ, தமிழர்களின் நல்ல நேரமோ கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால் அமைதியாகி விட்டார். 

இப்போது மீண்டும் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வந்திருக்கிறார். ஆம், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வில் நுழைந்து கட்சியை வலுப்படுத்துவேன் என்று குரல் கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே அ.தி.மு.க. கூட்டணியில் யாரை சேர்ப்பது, கழட்டிவிடுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் எடப்பாடிக்கு இப்போது மேலும் ஒரு தர்மசங்கடம்.

ஏனென்றால்  அ.தி.மு.க.வில் சேர்வதற்கு சில நிபந்தனைகள் வைத்திருக்கிறாராம்.

 தீபா  பேரவையை முழ்மையாக கலைத்துவிட்டு அ.தி.மு.க.வில் சேர்வதால் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும், டிரைவர் ராஜாவுக்கும் உத்தரவாதமான பதவிகள் வேண்டுமாம். தேர்தலில் நிற்பதற்கு தீபா தயாராக இருக்கிறாராம். அதனால் அ.தி.மு.க. எளிதில் வெல்லக்கூடிய ஒரு தொகுதி வேண்டுமாம். மாதவனுக்கும் ராஜாவுக்கும் கட்சியில் பொறுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இப்போ அவரை யாரு இங்கே வரச்சொன்னா என்று அ.தி.மு.க.வினர் கண் சிவக்கிறார்கள். பப்பிம்மா வந்தால் எதிரிகளை ஓட ஓட விரட்டுவார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லையே..?