நடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்..! தன்னிடம் கிடைத்த வீடியோவை என்ன செய்தார் தெரியுமா அந்த நடிகர்?

பிரபல சினிமா நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய வீடியோ பதிவு கொண்ட மெமரி கார்டு தடவியல் நிபுணர்கள் இடம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கொச்சியில் ஓடும் வாகனத்தில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மலையாள திரையுலகை சார்ந்த திலீப் என்பவர் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் . இவர் ஆரம்பம் முதலே இந்த வழக்கின் மீதான விசாரணையை தாமத படுத்துவதற்காக முயற்சி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தை அணுகினார். ஜனவரி மாதம் நான்காம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து திலிப்பை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் திலீப் தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் திலீப் மேலும் ஒரு வேண்டுகோளை நீதிமன்றத்திடம் வைத்துள்ளார். அந்த வேண்டுகோளின் படி நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அவர்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு கொண்ட மெமரி கார்டு மறு ஆய்வு செய்யவும் அதனை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதனுடைய நம்பகத்தன்மை கண்டறியவும் திலீப் அனுமதி கேட்டார். இதற்கு அனுமதித்துள்ள நீதிமன்றம் அதற்கான செலவுகளையும் திலீப் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு கொண்ட மெமரி கார்ட் சண்டிகரின் மத்திய தடவியல் ஆய்வகத்திற்கு (சி.எஃப்.எஸ்.எல்) அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகள் திலீப்புக்கு சாதகமாக அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.