காதல் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

ஓசூரில், புதியதாக காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் தனது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.


தருமபுரி மாவட்டம், கடகத்துர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா (19 வயது), அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரின் காதலுக்கு, அவர்களின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், இவர்கள் வீட்டை விட்டு ஓடிவந்து, ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,நேற்று (மார்ச் 31), கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, காளியப்பனின் சகோதரர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கார்த்திகாவின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டதாக, அவரது உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

காளியப்பனுடன் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்துகொண்டு, ஒன்றாக மது அருந்திவிட்டு, கார்த்திகாவை பாலியல் சித்ரவதை செய்து கொன்றிருக்கலாம் எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கார்த்திகாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், ஓசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

காதல் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி கொலை செய்துவிட்டதாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.