ரஜினியையே மிரட்டுனவன் நான்! ஓவியா டைரக்டரை மிரட்டும் சிங்காரவேலன்!

நடிகர் விமல் மற்றும் நடிகை ஓவியா நடித்த களவாணி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொடர்ந்து 2017-ம் ஆண்டில் களவாணி-2 படத்தை காமரன் தயாரிப்பில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அது தடைப்பட்டுக்கொண்டே போனது.


இந்நிலையில் அந்த படத்தை வெளியிடாமல் இருக்க தயாரிப்பாளர் சிங்காரவேலனும், இயக்குநர் காமரனும் சதி செய்வதாக இயக்குநர் சற்குணம் புகார் அளித்துள்ளார்.

இந்த படத்தின் தலைப்பை களவாணியின் கதாநாயகனான விமலிடம் ஒப்பந்தம் போட்டு பெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள்  சிங்காரவேலன், காமரன் தெரிவித்து நீதிமன்றத்தில் தடைக்கேட்டு பெற்றனர்.

மேல்முறையீடு செய்த போது, வழக்கின் தீர்ப்பை மறுத்த  உயர்நீதிமன்ற நீதிபதி படத்தை உடனடியாக வெளியிடும் பணியை மேற்கொள்ளுங்கள் என்று சற்குணத்திற்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு சாதமாக வந்தபோதிலும் தற்போது வரை படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சிங்காரவேலன் மற்றும் காமரன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சற்குணம் புகார் அளித்துள்ளார்.