பிரபல ஓட்டலின் சாம்பார் இட்லியில் சுடச்சுட செத்து மிதந்த பல்லி! அதிர்ந்த வாடிக்கையாளர்கள்!

தென்னிந்திய மக்களின் மிகவும் விரும்பத்தக்க காலை உணவாக இட்லி, சாம்பார் முதலியன உள்ளன. இந்த உணவுகளை வடமாநிலத்தவரும் விரும்பி உண்கின்றனர்.


இதேபோன்று தென்னிந்தியாவில் இருந்து வடஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதியினருக்கு நாக்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் "அஜானி ஸ்கோவயர்" (Ajani Square) என்ற ஒரு புகழ்பெற்ற உணவு வீதி ஒன்றுள்ளது. இது தென்னிந்தியாவில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்பும் உணவு வீதியாக திகழ்கிறது. 

இந்த வீதியில் ஹல்திராம் கம்பெனியின் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று காலை ஒரு தம்பதியினர் உணவு உண்ண வந்தனர். அவர்கள் (vada sambar) சாம்பார் வடையை சாப்பிட ஆர்டர் செய்தனர். அதை உண்ணும் போது அவர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். அந்த உணவில் இறந்து போன பல்லி ஒன்று கிடந்ததை கண்ட வாடிக்கையாளர் அந்த உணவக மேலாளரை கடுமையாக கண்டித்தார்.  

இதன் பின்னர்,(Food and Drugs Administration (FDA) ) உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வகத்திற்கு ரிப்போர்ட் செய்யப்பட்டது .அவர்கள் ஆய்வறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளனர். மேலும் 2 வாடிக்கையாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மதியம் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் எப்படி சரவண பவன் பிரபலமோ அது போல் வட இந்தியாவில் ஹல்திராம் பிரபலம்.

பிரபல உணவகத்தின் சாம்பார் இட்லியில் பல்லி கிடந்தது அந்த உணவக வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.