திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: பேட்டிங்கில் கலக்கிய டேவிட் வார்னர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ipl T 20 போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 181 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட் செய்ய பணித்தது.பந்தை சேதப்படுத்திய காரணத்தினால் ஒரு ஆண்டு தடைக்கு பின் களமிறங்கிய டேவிட் வார்னர் இந்த போட்டியில் சூப்பராக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார்.

அவருடன் களமிறங்கிய பரிஸ்டோவ் 39 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய விஜய் ஷங்கர் அதிரடியா 40 ரன்களை சேர்த்தார். இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரஸ்ஸல் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 182 ரன்களை சேஸ் செய்து அடிவருகிறது.