உலக கோப்பை வரலாற்றில் முதல் முறை! வங்கதேசத்தை தெறிக்கவிட்டு வார்னர் படைத்த சாதனை!

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலில் இரண்டு முறை ஒரே இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் குறித்த பெருமையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பெற்றுள்ளது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆவார். இவர் இந்த உலகக் கோப்பையில் அற்புதமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வங்காள தேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.

டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 147 பந்துகளில் 166 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்சில் அவர் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களை விரட்டினார். இந்த சதமானது அவருடைய 16-வது சதமாக அமைந்தது.

இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் இரு முறை 150 ரண்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இவர் 173 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சதமும் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் அரைசதமும் அடித்தது குறிப்பிடத்தக்கது.  இவரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓராண்டுக்கு தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு தடையிலிருந்து சிறிது காலம் முன்னரே வெளிவந்த டேவிட் வார்னர் இந்த சாதனையை படைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது