சுத்தியால் ஓங்கி அடி! கத்தியால் குத்திக் கிழித்தோம்! தந்தையை கொடூர கொலை செய்த 3 மகள்களின் பகீர் வாக்குமூலம்! அதிர வைக்கும் காரணம்!

சொந்த தந்தையே தங்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் 3 மகள்கள் அவரை கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டில் ஏஞ்சலினா(18) கிறிஸ்டினா(19), மரியா (17) என்ற  3 மகள்கள் தங்களுடைய 57 வயதான தந்தையுடன் வசித்துவந்தனர். அவருடைய பெயர் மிக்கேல்இந்நிலையில் 3 மகள்களையும் மிக்கேல் கடந்த சில வருடங்களாகவே பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் எவ்வளவோ தடுத்து பார்த்தும் அவர்களால் இயலவில்லை.

இந்நிலையில் 3 பெரும் முடிவெடுத்து மிக்கேலை கொலை செய்ய திட்டமிட்டனர். அவ்வகையில் மிக்கேல் வீட்டில் ஓய்வு பெற்று கொண்டிருந்தபோது மரியாவும், ஏஞ்சலினாவும் அவரை கத்தியாலும், சுத்தியலாலும் அடித்து கொலை செய்துள்ளனர். இதற்கு அவர்களுடைய மூத்த சகோதரியான கிறிஸ்டினாவும் உதவியதாக கூறப்படுகிறது.

மேலும் கொலை செய்த பின்னர் மரியா காவல்நிலையத்திற்கு அழைப்பு விடுத்து, மிக்கேல் அவர்களை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது மரியா தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை தந்தையை கத்தியாலும், சுத்தியலாலும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் கொடுமைகளை தாங்க இயலாமல் மகள்கள் செய்தது சரியே என்று சிலர் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் மிக்கேலின் உறவினர்கள் அவர் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர். 

இந்த வயதில் மூத்த சகோதரிகள் இருவருக்கும் 8 முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.