தந்தை இறப்பால் ஏற்பட்ட தவிப்பு! இளம் பெண் கையில் குத்திய விசித்திர பச்சை! நெகிழ வைக்கும் செயல்!

இறந்துபோன தந்தையின் குரல் பதிவை மகள் பச்சை குத்தியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் கலிஃபோர்னியா என்ற மாகானம் அமைந்துள்ளது. இங்கு யுவட்டே என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு இவருடைய தந்தை மீது அதிகளவில் அன்பு இருந்துள்ளது. அதேபோன்று இவருடைய தந்தைக்கும் இவர் மீது அதிக அளவில் அன்பு இருந்துள்ளது.

இந்நிலையில் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யுவட்டேவின் தந்தை 2013-ஆம் கல்லீரல் புற்று நோயால் உயிரிழந்தார். அப்போது தன்னுடைய தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவும், பல வெளிநாடுகள் மற்றும் மீன் பிடிக்கும் இடங்களுக்கு அவருடன் சென்றதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.

வாழ்வில் எப்படி தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று தன்னுடைய தங்கை தனக்கு கற்று கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அவருடைய பேச்சினை மறக்காமல் இருப்பதற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்று யுவட்டே யோசித்துள்ளார்.

அப்போதுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரல் பதிவை கையில் டாட்டூவாக பச்சை குத்திக் கொள்ளலாம் என்று பதிவினை பார்த்துள்ளார். 2017-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று தன்னுடைய தந்தையின் குரலை கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார்‌. பின்னர் "ஸ்கின் மோஷன்" என்ற செயலியின் மூலம் ஸ்கேன் செய்யும்போது அவருடைய தந்தையின் குரலை கேட்பது போன்று வடிவமைத்திருந்தார்.

இதற்காக அவர் இந்திய மதிப்பில் மொத்தம் 12,800 ரூபாயை செலவழித்ததாக கூறியுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.