புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயமானது ஏன்? சற்று முன் வெளியான பகீர் தகவல்!

பிரபல கிராமிய பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் வீட்டைவிட்டு ஓடியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கிராமிய பாடகர்களில் புஷ்பவனம் குப்புசாமி ஒருவர். இவர் சென்னை பல்கலைக்கழக இசைத்துறையில் பணியாற்றி வந்த அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு பல்லவி, மேகா என்று 2 மகள்கள் உள்ளனர். பல்லவி மூத்த மகளாவார்.

இவர் தற்போது மருத்துவ பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இதனிடையே நேற்று சகோதரிகள் பல்லவி - மேகா இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் வாக்குவாதங்கள் முற்றிப்போய் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பல்லவி தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய பல்லவி நேற்று இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன  குப்புசாமியின் குடும்பத்தினர், கௌஷிக் என்ற குடும்ப உறவினர் மூலம் பல்லவி காணவில்லை என்ற புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லவியும் அவரது சகோதரி மேகாவும் மிக நெருக்கமாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சகோதரியுடன் தகராறு என்று புஷ்பவனம் குப்புசாமியின் குடும்பத்தினர் கூறுவது நம்பும் படி இல்லை என்கின்றனர் போலீசார். தனது சகோதரியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பல்லவி அடிக்கடி பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்.